Thursday, 21 April 2016

இந்துத்வா


   இந்துத்வா என்பது பலர் நினைப்பது போல் ஒரு மதம் அல்ல.  மதம் என்ற சதாரண சொல் குறிப்பிடுவது ஒரு மதத்தலைவனையும் அதன் வழிபாட்டு முறையையுமே. நாம் இந்துத்வா என குறிப்பிடுவது ஒரு மனிதன் வாழ வேண்டிய வாழ்க்கை நெறிமுறைகள்.

  சத்தியத்தை தேடி பயணிக்கிற எவரும் அவா; கிறிஸ்தவராகவோ, முஸ்லீமாகவோ இருந்தால் கூட அவா; இந்துதான்.

   இந்துத்வா ரிஷிகள் முனிவர் களின் ஆராய்ச்சியில், ஞான திருஷடியில் சுயநலம் பாராத உழைப்பில் வெளிப்பட்ட ஞான களஞ்சியங்கள். காலத்தில் அழியாது தலைமுறை தலைமுறை தாண்டி நம்மிடம் வந்து சேரநதுள்ளது. இதைப் போற்ற வேண்டியது, பாதுகாக்க வேண்டியது நமது கடமை
.
  அறிவில்லாத சில அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றி தனக்கும், தன் குடும்பத்திற்கும், தனது தோழிக்கும், உடன் பிறப்புகளுக்கும் வளம் சேரப்பதற்காக இதை மதவாதம் என்று கூறுகிறாh;கள். இவர்கள் தங்களது சந்ததிக்கும் நல்லதை செய்யவில்லை, பாவத்தையே சேர்க்கிறாh;கள்.

  ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான நிரஞ்சன் ஒரு நாள் படகில் வருகிறார். அப்போது உடனிருப்பவர்கள் குருதேவரை இழிவாக பேசுகிறார்கள். நிரஞ்சன் ஆத்திரமடைகிறார். 'இப்போது நீங்கள் நிறுத்தவில்லை என்றால் இதோ படகையே கங்கை பிரவாகத்தில் மூழ்கடித்து விடுவேன்.’ என கூறுகிறார். இது ஸ்ரீராமகிருஷ் ணருக்கு தெரியவந்து, நிரஞ்சனை கடிந்து கொண்டார். ஆனால் யோகின் எனும் சீடருக்கு இதே அனுபவம் ஏற்பட்டது. படகில் சிலர் ஸ்ரீராமகிருஷ்ணர் குறித்து அவதூறுகள் பேசினர். யோகின் எதுவும் செய்யவில்லை. அமைதியாக அமர்ந்திருந்தார். பேசாமல் கரையிறங்கி குருதேவரிடம் வந்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணர் சொன்னார், “உன் குருவை அவமதிப்பதை கேட்டுக்கொண்டு நீ சும்மா இருந்திருக்க கூடாது.’’

  கண்மூடி இருக்கலாம், அவதூறுகள் மறைந்துவிடும்; என்கிற நிலைபாடும், வன்முறையால் அவற்றை அடக்கிவிடலாம் என்பதும் சரியான அணுகுமுறை அல்ல. மாறாக ஞானத்துடன் உண்மையை உரக்க சொல்வதும் எந்த அவதூறையும் தர்மத்தை மேலும் பரவலாக மக்களிடம் கொண்டு செல்லும் வழியாக மாற்றுவதுமே அவதூறுகளை எதிர்கொள்வதில் ஹிந்துவின் அணுகுமுறையாக இருக்க வேண்டும்.

  அஹிம்சை வீரர்களுக்கே உரியது.

No comments:

Post a Comment