வீர சுதந்திரம் வேண்டி "
dhananjayan
Sunday, 3 August 2025
வீர சுதந்திரம் வேண்டி "
Thursday, 24 July 2025
தந்தையை நானறிவேன்
பாட்டனை நானறிவேன்
அதன்
முந்தையர் யாரறிவார்!!
பிறந்தார்,
இருந்தார்,
மறைந்தார்,
இதுவே வாழ்க்கையெனில்
தோற்றலின் பயனென்ன ?
செயற்றலின் பயனென்ன ?
வீழ்தலில் குறையென்ன ?
புரிந்தும் புரியாத
இருண்ட பகலிலே
பகடை உருட்டுபவன்
ஆட்டுகிறான்
ஆடுகின்றோம்
வாழ்தலும் அவன் சித்தம்
வீழ்தலும் அவன் சித்தம்
இந்த
ஒட்டாத
பழரசத்தை
மேனியில் ஒட்டிவிட்டால்
இரண்டிலும் இனிமையிலை
இரண்டிலும் துன்மையிலை
ஓட்டும் வழியறியா
அலைந்து ஓய்ந்துவிட்டேன்
மற்றை பிறவியதில்
விழித்தால் பிழைத்திடுவேன்
- தனஞ்சயன்
Thursday, 3 July 2025
காட்டேரிகள் அதிகாரமென்றால்
Saturday, 28 June 2025
ஜனனம் மரணத்தின் ஆரம்பம்.
ஜனனம்
ஒரு துக்க சந்தோஷம்
ஒரு முடிவின்
துவக்கம்.
காலம்
எப்போதும்
கனிவாய்
இருப்பதில்லை.
பூப்பதும்
காய்ப்பதும்
பழுத்து
உதிரத் தானே.
ஒரு முடிவில் தானே
ஒரு துவக்கமும்
ஜனிக்கும்.
ஜனனம்
மரணத்தின்
ஆரம்பம்.
மரணம்
ஒரு
இனிய
சோகம்!
.... தனஞ்சயன்
Sunday, 8 June 2025
ஞானத்தை விட்டுச்செல்
ஞானத்தை விட்டுச்செல்
அஞ்ஞானத்தையும் விட்டுச்செல்
Friday, 6 June 2025
முன் அழுத காரணம்தான்
விழுந்தேன் வெளியொளியில்
ஒன்றும் புரியவில்லை:
அழுதேன், அழுதேன்
அணைக்கும் கரங்கள் அணைக்க,
அழுகை மறந்தேன்:
மீண்டும் அழும்வரை...
கவிழ்ந்தேன், ஊர்ந்தேன்,
நடை தத்தி நடந்தேன்,
கவலை ஏதுமில்லை:
ஆயினும் அழுதேன் ஏனோ, ஏனோ ??
அணைப்பார் அணைத்தவுடன்,
விழித்தேன், சிரித்தேன்.
ஓடினேன், ஆடினேன்,
வெளியிலே களிப்புடன்,
தேடினேன், திமிறினேன்,
அடங்கா காளையாய், ஆனால்..
உள்ளிலே அழுதது
வெளியெவரும் அறிவரோ..
கையிலும் காலிலும்
கட்டுடன் சிரித்தேன்.
நான் தேடி கட்டுண்ட
பொன் விலங்கு மங்குமுன்
அழுவதா சிரிப்பதா
தெரியாமல் நான் சிரித்தேன்.
இரண்டு மூன்றாக
அமிர்தம் உண்டதுபோல்
கண்குளிர காதலித்தேன்.
மூன்றும் நான்கும் வளர்ந்தபின்
இணைசேர்க்க விழிபிதுங்கி
மங்கலத்தில் விழிதிறந்தேன்.
நரை விழுந்து
கண் மறைத்து
நரம்புகளும் துணை தேட
வேர்களையும் காணவில்லை, அங்கு
விழுதுகளும் காணவில்லை.
வேரற்ற கொடி வீழ்ந்தேன்
கூடிய கூட்டமெல்லாம்
புகழ் மாலை, பூமாலை
முன் செல்ல, கடல் தொடர
நித்திரையில் யோசித்தேன்
முன் அழுத காரணம்தான்
முழுதாக புரிந்ததுவே!
. தனஞ்சயன்
Monday, 26 May 2025
சிதடனாய் மாற்றிவிடு
கண்கள் கலங்கவில்லை !!
கண்ணில் இனி ஈரமில்லை...
இது காட்சியா
அல்ல நமது வீழ்ச்சியா??
இருப்பவர் சுவைத்து போக
எஞ்சிய அமிர்தம் என
பசித்தவர் எடுத்துப்போக
பிஞ்சதன் நெஞ்சம்
இங்கு கெஞ்சிடும்
காட்சி என்ன:::
ஊனில் துளையெடுத்து
உதிரம் தனை குடித்து
துடியாய் துடிப்பதுபோல்
நெஞ்சம் துடிப்பதென்ன
கண்கள் மறைப்பதென்ன
இதுவும்
உன் விளையாட்டென்றால்
இறைவா நிறுத்திவிடு
இல்லை
எனை
சிதடனாய் மாற்றிவிடு
- தனஞ்சயன்