Saturday, 23 April 2016

சட்டமும் மதங்களும்

சமீப காலமாக நீதிமன்றங்கள் அரசியலிலும் மதத்திலும் மூக்கை நுழைக்கின்றன. சமீபத்திலே ஒரு நீதிபதி கூறுகிறார் ; “யார்  வேண்டுமானாலும் தவறிழைக்கலாம், ஜனாதிபதி கூட.. சட்டத்தின் முன் அனைவரும் சமம்’’ உண்மைதான்.  ஆனால் அந்த நீதிபதி அந்த கணம் மறந்தது, நீதிபதி கூட தவறிழைக்கலாம். இல்லையென்றால் கீழ் கோர்ட்டில் தோற்ற வழக்கு மேல்கோர்ட்டில் ஜெயிப்பது எப்படி?

சட்டத்தை தர்மத்தோடு இணைத்து பார்க்கும்பொழது சட்டத்திற்கு ஒரு தார்மீக அந்தஸ்து கிடைக்கிறது. தர்மம் இல்லாத சட்டம் அது அடிபட்ட குருட்டு சிங்கம்போல் ஆகிவிடும்.

நமது நாட்டின் அடிப்படை தர்மசாஸ்திரங்களான, மனு சாஸ்திரம் மற்றும் அர்த்தசாஸ்திரங்கள் நீதிபாரியாலனத்தைப் பற்றி விரிவாக விளக்குகின்றன. அவைகள் மன்னனை நீதியின் உச்சக்கட்ட தலைவராக பார்க்கின்றன. ஆனால் அந்த மன்னனே குணவானாக, பந்த பாசங்களுக்கு பணியாதவனாக, உண்மையுள்ளவனாக, பாரபட்சமில்லாதவனாக, தருமத்தை மதிக்கின்றவனாக இருந்தால் மட்டுமே நீதிபாரிபாலனம் செய்யமுடியும்.

நீதிபாரிபாலனத்தில் கவனிக்கப்பட வேண்டியவைகள் நமது சாஸ்திரங்கள் (1) தர்ம நெறிமுறைகள் (2) சாதாரண சட்டங்கள் (3) நடைமுறை வழக்கங்கள் (4) ராஜ ஆணைகள் (5).

இவற்றில் தர்ம நெறிமுறைகள் சாதாரண சட்டங்களைவிட மதிப்பு வாய்ந்தது. ஆனால் அவற்றை விளங்குவது கடினம் என்பதால் நடைமுறை வழக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டுமே தவிர சட்டங்களை விருப்பமில்லாத சமுதாயம் மீது திணிக்க கூடாது. இது அh;த்தசாஸ்திரம் உரைப்பது.

இன்று இந்து ஆலயங்களில் பெண்கள் நுழைவதை தடை செய்ய முடியாது என்று கூறும் நீதிமன்றங்கள் வசதியாக மறந்துவிடுவது.......

(1) இந்து ஆலயங்களில் மட்டுமல்ல மசூதிகளிலும் பெண்கள் போக முடியாது. இதை சட்டப்படியே கேள்வி கேட்கவும் முடியாது.

(2) எல்லா இந்து கோவில்களிலும் இந்த நடைமுறை இல்லை. சில கோவில்களில் சில சமயங்களில் ஆண்களை அனுமதிப்பதில்லை.

இந்த பிரச்சினைகளை நீதிமன்றம்பால் எடுத்துச் செல்பவாகளும் ஏதோ ஆன்மீக அன்பாகள் அல்ல, விளம்பரம் விரும்பும் வேடதாரிகள்.

ஹிந்து சமுதாயம் மாற்றங்களை என்றுமே வரவேற்பது. இந்த மாற்றமும் நிகழ்ந்தே தீரும். ஆனால் அது சட்டத்தின் வாயிலாக அல்ல. சமுதாய மனமாற்றத்தால் நடக்க வேண்டும், நடக்கும்.

ஒரு கோவில் வாணவேடிக்ககையில் தீ விபத்து ஏற்பட்டால், வாணவேடிக்கையே தடை செய்யும் நீதிமன்றம் வாகனங்களால் விபத்து ஏற்படுவதால் வாகனங்களை தடை செய்யுமா?.

இந்துக்களின் நடைமுறை பழக்கங்களையும், வழிமுறைகளையும் தடைசெய்வதில், கேள்வி கேட்பதில் நீதிமன்றங்களுக்கு அப்படி என்ன அதீத அக்கறை!!!.

No comments:

Post a Comment