கண்கள் கலங்கவில்லை !!
கண்ணில் இனி ஈரமில்லை...
இது காட்சியா
அல்ல நமது வீழ்ச்சியா??
இருப்பவர் சுவைத்து போக
எஞ்சிய அமிர்தம் என
பசித்தவர் எடுத்துப்போக
பிஞ்சதன் நெஞ்சம்
இங்கு கெஞ்சிடும்
காட்சி என்ன:::
ஊனில் துளையெடுத்து
உதிரம் தனை குடித்து
துடியாய் துடிப்பதுபோல்
நெஞ்சம் துடிப்பதென்ன
கண்கள் மறைப்பதென்ன
இதுவும்
உன் விளையாட்டென்றால்
இறைவா நிறுத்திவிடு
இல்லை
எனை
சிதடனாய் மாற்றிவிடு
- தனஞ்சயன்