Saturday, 23 April 2016

சனாதன தர்மம்

சனாதன தர்மம்

நாம் இந்து மதம் என்று சொல்வதைவிட இந்து தர்மம், சனாதன தர்மம் என்று சொல்வதையே விரும்புகிறோம். தர்மம், வாழ்க்கை முறை:  மதம் என்ற சொற்றொடா; நாம் முன்பு எண்ணியதில்லை.

மதம் ஒரு வழிபாட்டு முறை மட்டுமே. வழிபாட்டு முறை வேறு: வாழ்க்கை வேறு என்பது, கிறிஸ்தவம் பிரபலம் ஆனபின் வந்த கோட்பாடு.

நாம் இரண்டையும் பிரித்துப் பார்ப்பதில்லை. அதனால்தான் குறுகிய அர்த்தமுள்ள மதம் என்ற பதத்தை நமது ஆதி அந்தமில்லா சனாதன தர்மத்திற்கு இணையாகக் கொள்ள முடியாது.

தர்மம் மனிதனை ஒன்று சேர்க்கும். மதம் வேறுபாடு உடையது  அது மனிதனைப் பிரிக்கும். கிறிஸ்தவ, இஸ்லாம், ஹிந்து  தர்மம் மூன்றுமே மக்களுக்கு மோட்சத்தை அடையும் வழியைப் பற்றி சொல்கின்றன.

கிறிஸ்தவமும், இஸ்லாமும் அனைவரும் மோட்ஷம் அடையலாம் என்று சொல்கின்றன: ஆனால் அதற்கு மக்கள் அந்த மதங்களையே பின்பற்ற வேண்டுமென கட்டுபாடு விதிக்கின்றன.

இந்து தர்மம் எந்த மதத்தவரும் மதம் மாறமலே மோட்ஷம் அடையலாம் என்று கூறுகிறது.

 “மதம் ஏதாயாலும் மனிதன் நன்னாயால் மதி”  என்று சொன்ன நாராயண  குரு இந்த தர்மத்தின் பிரதிநிதி: இந்து தர்மத்தின் பிரதிநிதி..

சிந்திக்க தெரிந்தவா;களுக்கு இவற்றில் எந்த வழி உலகத்துவமானது என்பது புரி யும்.

குடியுரிமையா? அல்லது மனித உரிமையா எது பெரியது என்று கேட்டால் எந்த சாதாரண மனிதனுக்கும் அது மனித உரிமையே என்ற பதில் தெரியும். மனித உரிமை எல்லைகளை கடந்து நிற்பது  அதுபோல இந்து தர்மம் எல்லைகளை கடந்தது.

மனிதன் மனிதனாக வாழ்ந்து தெய்வமாக மாறும் வழிகளை போதித்து உலக அமைதியை நிலைநாட்டுவதே தர்மம். ஒவ்வொரு நிலையிலும் ஒருவா; எப்படி வாழ வேண்டும் என்பதை விளக்க, சாமான்ய , ராஜ , சமாஜ என தர்மம் பலவகையாக பிரிகின்றது.

ஒரு முனிவா; கடும் தவம் இருந்து சித்திகள் பல பெற்றார்;. ஒருநாள் அவா; தியானத்தில் இருக்கும்பொழுது கொக்கு ஒன்று அவா; மீது எச்சம் போட்டுவிட்டது.  கண்விழித்து பார்த்த முனிவா; கொக்கை கோபத்துடன பார்த்தார்;, அது எரிந்து சாம்பலாகி விழுந்தது.

 மிகப்பெரிய சக்தி பெற்றுவிட்ட இறுமாப்பில் அவா; தெருவீதிகளில் நடந்து ஒரு வீட்டின் முன் பிச்சைக்காக நின்றார்;. அந்த வீட்டுப் பெண்மணியோ இவரை சிறிது நேரம் காத்திருக்க செய்துவிட்டு தனது கணவருக்கு வேண்டிய பணிவிடைகளை செய்துவிட்டு முனிவருக்கு  அமுது படைக்க வந்தார்;.

சித்தருக்கோ காக்க வைத்ததில் கடும்கோபம். ஓன்றும் பேசாமல் முறைத்துப் பார்த்தார்;. அந்த குலமகள் சிரித்துக் கொண்டே கேட்டார் ;. ‘‘கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா.! என்னை நீ எரிக்க முடியாது.’’

முனிவருக்கோ மிகுந்த ஆச்சரியம். தனது யோக சக்தி செயல்படாதது மட்டுமல்ல இந்த பெண்ணுக்கு என் மனதை வாசிக்கவும் முடிகிறதே எப்படி? என்று யோசித்தார் ;.

‘‘நான் தவம் செய்யவில்லை. வேதங்கள் படிக்கவுமில்லை. என் கடமைகளை தவறாமல் செய்கிறேன். அத்தனை யோக சித்திகளும் என்னை தேடி வருகின்றன. இதற்கு மேலும் இதைப்பற்றி தெரிய வேண்டுமானால் பக்கத்து ஊh; சந்தையில் இறைச்சி விற்கும் “வியாதன்” ஐ போய்ப் பார்;’’,; என்றாள்.

தனது பெருமைக்கு இழுக்காக பட்டாலும், இந்த சித்துகளை பற்றி முழுமையாக தெரிய வேண்டுமே, அதற்காக முனிவரும் சென்றார் ;. இறைச்சியை துண்டு துண்டாக வெட்டி எடை போட்டு, பேரம் பேசி வியாபாரம் செய்யும் வியாதன் முன் அருவருப்போடு சென்றாh;. ‘‘பக்கத்து ஊh; பெண்மணி அனுப்பினார் ; தானே. சற்று அமருங்கள். இதோ, வியாபாரத்தை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லலாம்’’; எனக் கூறி வியாதனும் காக்க வைத்தார் ;. பாவம், முனிவருக்கு ஒன்றும் விளங்கவில்லை!

வீட்டிற்கு சென்றதும் அவரது பெற்றோருக்கு பணிவிடைகள் செய்து விட்டு, காத்திருந்த முனிவரிடம் வந்தார்;. முனிவரும் பல ஆன்மா பற்றிய சந்தேகங்கள் கேட்க அதற்கு அவா; அளித்த பதில்கள் மகாபாரத்தில் வியாத கீதை  என்று உரைக்கப்படுகிறது.

‘‘இத்தனை தெரிந்தவா;, இந்த தொழில் செய்யலாமா?’’ இது முனிவா;.

“ஐயா எந்த தொழிலிலும் தவறில்லை. நான் பற்றில்லாமல் ; கடமைகளை
செய்கிறேன். நான் தவம் செய்வதில்லை. சடங்குகள் செய்வதில்லை.  ஞானம், என்னுள்ளே தானாக புகுந்து கொள்கிறது’’, என்றாh;.

இதுதான் தர்மம், இங்கு மதத்தை பார்க்க முடியவில்லை.

ஜென்ம விரோதிகளான அசுரர்களும் தேவர்களும் ஒன்றிணைந்து செயல்பட்டால் அமுதை திரட்ட முடியும். ‘இது ஒற்றுமையின் பலம்’ என்பதை போதிக்கிறது தர்மம்.

சமுதாய நன்மைக்காக காரியங்களை செய்வதே தர்மம் என்பதை மோகினி அவதாரம் போதிக்கின்றது.

தர்மத்தின் படி நாம் நடந்தால் தருமம் நம்மைக் காக்கும் என்பது நமது தர்மம் நமக்குப் போதித்த பால பாடம். சங்கரா; சொல்கிறாh;, ‘‘எது சமுதாயத்திற்கும், உலகிற்கும் நன்மை பயப்பதாக அமையுமோ அது தர்மம்’’, என்று. இதைத்தான் வள்ளுவா;,
  “வாய்மை எனப்படுவது யாதெனில் யாதொன்றும்
       தீமை இலாத சொலல்”       என்று கூறுகிறாh;.

சத்தியம் உலகை தாங்கி நிற்பது. அந்த சத்தியம் படி நடப்பதே தர்மம் இந்த தர்மத்தில் பகையில்லை, கொடுமைகளில்லை துக்கமில்லை.

இந்த தர்மமே இந்து தர்மம். நமக்குள்ளே பல மதங்கள் உண்டு.  சாக்தம், கௌமாரம், காணபத்தியம், சைவம், வைணவம் இன்னும் பல.

ஆனால் தர்மம் ஒன்று: அதுவே, சனாதன தர்மம்.

அழியாத, அழிக்க முடியாத, அழியக்கூடாத .தர்மம் 

காரணம் இது அழிந்துவிட்டால் உலகு அழிந்துவிடும்.

No comments:

Post a Comment