இந்து மதம் தனி மனித மேம்பாட்டையும் ஒழுக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டது. தனி மனிதன் சமுதாயத்திற்காக உழைத்து சமுதாயத்தோடு இணைவது நமது பண்பாடு. மற்ற மதங்கள் ஒரு அமைப்பாக இருந்து மனிதனை காப்பாற்றுபவை. ஆக மற்ற மத அமைப்புகள் ஆன்மீகத்தை வியாபாரமாக மாற்றுகின்றன. நமது அமைப்பு மனிதனை தெய்வமாக மாற்றும்.
இந்த அடிப்படை வேறுபாட்டினால்தான் இந்து மதத்தில் மற்ற மதங்களைப்போன்ற கட்டுக்கோப்பான அமைப்புகள் இல்லை. இருந்தாலும் காலத்தின் கட்டாயம் காரணமாக பல சூழ்நிலைகளில் அத்தகைய அமைப்புகள் உருவாகியுள்ளன. அவைகளின் தேவைகளுக்கேற்ப அவை வளரவோ, மங்கவோ செய்யும். அந்த அந்த அமைப்புகளில் அந்த அந்த காலகட்டங்களில் நாமும் நம்மை இணைத்துக் கொண்டால் இந்த பண்பாடு சிதையாமல் காக்கப்படும்.
No comments:
Post a Comment