அது எங்கள் உலகத்தின் பொழுது போக்கு பூங்கா. அண்ணாச்சிக் கடை என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் எங்கள் “ வால் மார்ட்”. குண்டூசி முதல் உழுந்தம் பருப்பு வரை, துடைப்பக்கட்டை முதல் குளியல்சோப் வரை என எல்லாம் கிடைக்கும் அங்காடி. அண்ணாச்சிக்கு தனி ஏஜென்சி கிடையாது. அதனால் எல்லாவித சாதனங்களும் தடையின்றி கிடைக்கும்.
அரைக்கிலோ கடலை வாங்குபவன் 100கிராம் கடலையை சுவைபார்க்க என்றே விழுங்கி விடுவான். அண்ணாச்சி அதைப்பற்றியெல்லாம் கவலைப்பட்டதில்லை.
இரவு வந்துவிட்டால் ஒரு சில மங்கல் பல்புகளே கடையை அடையாளம் காட்டும். கல்யாண வீட்டிலே தட்டுபாடு என்றால் இரவு 12 மணிக்கும், விடுமுறை நாளென்றாலும் டார்ச எடுத்துக் கொண்டு கிளம்பிவிடுவார் கடையைத் திறக்க.
அதிகம் வாங்குகின்ற பண்ணையாருக்கு சாதாரண விலையும், அன்றாடம் காய்ச்சிக்கு தள்ளுபடி விலையிலும் சாதனம் தருவது அண்ணாச்சியின் சிறப்பம்சம்.
ஒருநாள் கூட அண்ணாச்சி தனது கடைக்கு வந்து பொருள் வாங்குங்கள என்று சிபாரிசு செய்து அழைத்ததில்லை. வியாபாரம் கூடுவதைப் பற்றியோ குறைவதைப் பற்றியோ கவலைப்படுவதில்லை.
கடைசியாக வாங்கிய ரேடியோ பெட்டிதான் அண்ணாச்சி கடையின் விசேஷ கவர் ச்சிப் பொருள்.
தரத்தில் குறைந்த பொருளையோ எடைகுறைந்த எடைக் கற்களோ அண்ணாச்சி கடையில் இருந்ததில்லை என்பது அத்தனை கிராமங்களும் அறியும்.
திடீரென கிராமம் நகரமானது................................
அண்ணாச்சி கடைக்கு போட்டியாக பல கடைகள் வந்தன.
கலா; குமிழ் விளக்குகளும் டி.வி. பெட்டிகளும் அழகு காட்டின.
அழகாக ஆடையுடுத்திய பெண்கள் அலங்காரச் சிரிப்போடு வரவேற்றனா;.
இளைஞா; பட்டாளம் புதிய கடையை பார்க்க அலைமோதியது.
புதிய கடைகள் புதிது புதிதாக முளைத்தன
“வியாதியஸ்தருக்கான நல்லெண்ணெய் எனது கடையில் என ஒருவா; கூவ,
மனமகிழ, இளைப்பாற, எனது கடை என மற்றவா; கூவ
பூலோகத்தில் சொர்க்கத்தை காட்டுகிறார்கள் என கூட்டம் அலைமோதியது.
நான் நீ என போட்டி போட்டு விளம்பரங்கள்.
புதிது புதிதாக இலவசங்கள். 5 ரூபாய் வாங்கினால் 10ரூபாய் இலவசம்.
யாரும் இது எப்படி சாத்தியம் என கேட்கவில்லை. தேவையோ இல்லையோ கடை களில் கூட்டம் மொய்த்தது.
‘அண்ணாச்சி இத்தனை நாள் நமக்காக ஏதாவது செய்தாரா இவர்களைப் போல,’ என அங்கலாய்த்தது.
நமது பணம் தானே கரைகிறது என யாரும் கவலைப்படவில்லை. தரம், எடை, கனிவு பாரிவு உலகிலே பறந்தது.
தரத்தைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை. கடலை சுவைக்கமுடியாதபடி பாக்கெட்டில் அடைபட்டது, யாருக்கும் தொரியவில்லை.
பண்ணையாருக்குத் தள்ளுபடியும், அன்றாடம் காய்ச்சிக்கு அதிக விலையும் யாருக்கும் உறுத்தவில்லை.
கடைக்கு எதற்கு அலங்காரம். இந்த அலங்காரத்திற்கும் சேர்த்துத் தானே நாம் கொடுக்க வேண்டும் என யாரும் எண்ணவில்லை.
மயக்கம், பகட்டு, ஏமாற்று, பித்தலாட்டம் கொடிகட்டிப் பறந்தது.
அண்ணாச்சி கடையை திறக்க வேண்டுமா, வேண்டாமா என யோசித்துக் கொண்டிருக்கிறார் - கவலையோடு.
கவலை, அவரது வியாபாரம் படுத்துவிட்டதே என்பதற்காக அல்ல.!!
மக்கள் இப்படி ஏமாறுகின்றார்களே என்றுதான் அவர மனம் பதைபதைத்தது.
பின் குறிப்பு:
இந்தக் கதைக்கும் இன்று நமது நாட்டில் நடந்துவரும் மத மாற்றங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.