Thursday, 21 April 2016

ஓன்றுமில்லை

                   
‘சிம்மி சிம்மி மின்னி சிணுங்கின்ன மின்மினி கண் எனக்கு’.

ஆடி வரும் அழகிலே அகிலமும் தவித்ததாம்.
ஆறடி உயரம் ஆஜானுபாவம்:
வாலிபச் செருக்கிலே நிமிர்ந்த தலை குனியவில்லை....

ஓடி உழைத்ததில் உருவமும் சிதைந்தது:
முதுகும் வளைந்தது:  தலையில் வயிரம் விளைந்தது.
ஓய்ந்து படுக்கையில் எழுப்பவோ யாருமில்லை!!
தூக்கி எரித்தனா;.......  கடலிலே கரைத்தனா;....

மயக்கிய விழிகளும், மிரட்டிய மொழிகளும் எங்கோ போயின.
வந்த வழி தெரியவில்லை: போனதுவும் புரியவில்லை.

எது இருந்தது?. இன்று எது போயிற்று?
அது போனதும் ஏன் எல்லாம் போயிற்று??
எல்லாமாய் இருந்தது என்னுள் புகுந்தது!.
எல்லாமாய் இருந்தது என்னுள்ளும் இருந்தது!.

எதையும் புரியாமல் அதனை எனதென்று எண்ணினேன்.
என்னுள் புகுந்தது எல்லாமாய் மறைந்தது.
      ஓன்றும் எனதில்லை.    
         எல்லாம் எனதே தான்..

             பூஜ்யத்துக்குள் ஒரு ராஜ்ஜியம

No comments:

Post a Comment