Saturday, 23 April 2016

அஹம் பிரம்மாஸ்மி - நான் கடவுள்--2

வேதங்கள் சொல்வது, ‘நான் வேறு கடவுள் வேறு அல்ல, நானே கடவுள்’. அதனால்தான் சுவாமி விவேகானந்தார் ; “மனிதனை பாவி என்று அழைப்பதே பாவம்!  மனிதர்கள் அழிவில்லாத அமிர்தத்தின்; புதல்வர்கள்” என்றார்;.

ஆனால், ‘நான் கடவுள். ஆகவே நான் கொலையும் செய்வேன். கொள்ளையும் அடிப்பேன். நானே எனது நியதிகளை உருவாக்குவேன்’, என்று சொன்னால் அது யாரும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விதண்டாவாதம்.

ஒரு மாணவன், டாக்டராக, இன்ஜினியராக, பண்டிதராக, மந்திரியாக, கலெக்டராக எதுவாக வேண்டுமனாலும் ஆகலாம். அவன் ஒவ்வொரு நிலையாக, தன்னுடைய முயற்சியில் தாண்டி, அவனது இலக்கை அடையலாம். அப்பொழுது அவன் கூறலாம். “நான் கலெக்டர்" என்று. ஆனால் எந்த முயற்சியும் எடுக்காமல் நான் கலெக்டர் என்று கூறுவது அறிவிலித்தனமாகத்தான் படும்.

இது, ஒன்றோ, பலவோ, ஜென்மங்கள் பயணித்து முடிகின்ற பயணம்!. இதற்காக நம் மனது, தன் முயற்ச்சியில், ஒவ்வொரு நிலையாகத் தாண்டி வர வேண்டும்.

நம் மனதின் முதல் நிலை, நாம் இருப்பதையே அறியாத நிலை. மயங்கிய அல்லது தூங்குகின்ற நிலை. பிறந்த குழந்தையின் நிலை. நான் உறங்குகிறேன். என் மனம், உடம்பு அத்தனையும் உறங்குகிறது. “துஞ்சினாh; செத்தாரில் வேறிலர் ”. விழிக்கும் வரை நானில்லை. இதுவே பிரக்ஞா அல்லது ஸ்ஷீப்தி நிலை என்பர்
.
இரண்டாவது நிலை: இதை ஸ்வப்ன நிலை அல்லது தைஜஸ நிலை என்பர் . அரை மயக்க நிலை. இளம் தூக்க நிலை. நான் கனவுலகில் சஞ்சாரிக்கிறேன். என் உடல், என்னைச் சுற்றியுள்ள காட்சிகள் அனைத்தும் மாயையென்றாலும் எனக்கு அக்கணத்தில் உண்மையாக தெரிகிறது.  நிஜம் எது? நிழல் எது? தெரியாத நிலை.

மூன்றாவது நிலை. “ஜாக்ரத்” அல்லது “வைஷ்வாரை” நிலை. நாம் நிஜம் என்று இன்று விழிப்புடன் நினைத்துக் கொண்டிருக்கும் இந்த மாய உலகத்தில் உண்மையாக வாழந்து கொண்டிருக்கும் நிலை. நமது உயர்ந்த, அமரத்துவ  நிலை தெரியாத, அறியாத, உணராத நிலை.   நம் அனைவரது இன்றைய நிலை இதுதான். நாம், மனம், உடம்பு, இந்திரியங்கள் இவற்றின் கூட்டாக வாழ்கின்ற நிலை. நமது  கர்மாக்கள் நமது நிலையை ஆட்டுவிக்கின்ற வாழ்க்கை.

எனக்கு ஒரு பெயர் ஒரு வடிவம், ஒரு அடையாளம் என கற்பித்து, உலகினின்று என்னை வேறுபடுத்தி காட்டி என் தனித்தன்மையை நான் நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் நிலை.  வேதங்கள் இதை இரவென்றும், சராசரி மனிதா;கள் இதையே பகலென்றும் எண்ணி வாழ்கின்ற வாழ்க்கை.  இதுவே த்வைத நிலை. என்னையும் இறைவனையும் வேறுபடுத்தி காண்கின்ற ஒரு சாதாரண மனிதனின் நிலை.

பெரும்பாலான மதங்கள் இந்த நிலையிலேயே மனிதனை பிடித்து வைத்துள்ளன. இதையும் மீறி அடுத்தடுத்த நிலைகளுக்கு சென்று இறைவனோடு கலந்தவா;கள் நம் ரிஷிகள், முனிவர்கள்.

நான்காவது நிலை ஆத்ம நிலை. நான் இருப்பதை உணர்கிறேன். நானே அந்த பரப்பிரம்மத்தின் அங்கமாகவும் உணர்கிறேன். என்னுடைய நிலையை, இவ்வுலக நிலைக்கும், இறைஅநுபூதிக்கும் என்னால் மாற்றமுடியும். நான் இவ்வுலக பந்தங்களிலிருந்து, விருப்பு, வெறுப்புகளிலிருந்து விடுபட்டு விட்டேன். நான் நானாக இருக்கிறேன். மற்றவர்களின் உறவுமுறைகள் என்னைப் பாதிப்பதில்லை. நானே ஆத்மாவாக உணர்கிறேன்.
மற்றவர்களையும் ஆன்மாவின் உருவமாக பார்க்கிறேன்.

ஆதிசங்கரருக்கு புலையனாக வந்து சிவபெருமான் போதித்தஞானம் இதுதான்.

இதுதான்.கடைசி நிலை நானே கடவுளாக பிரம்மமாக மாறுகின்ற தூய நிலை, ‘துரிய நிலை’. நான் வேறு, பிரம்மம் வேறாக தெரிவதில்லை. அத்வைதத்தை உண்மையாக, பூரணமாக அனுபவிக்கின்ற நிலை.
நான் உறங்குபவனும் இல்லை. விழிப்பவனும் இல்லை.
நான் வெளித்தோற்றமும், பேச்சும் இல்லை.
நான் ஆழ்மன உள் சிந்தனையும், உருவகமும் இல்லை.
நான் ஆணுமில்லை, பெண்ணு மில்லை, அலியுமில்லை.
என்னைத் தவிர எதுவுமில்லை.
நானே எல்லாம்.  எல்லாம் நானே.
நானே கடவுள்.


No comments:

Post a Comment