Thursday, 21 April 2016

இது அன்பு வழி


       - ஆதாரம் ஈராகி நியுஸ், Nov 3 – 2014 (e-news

   குர் திஸ் - குர் திஸ்hதான் பகுதியை சார் ந்த பழமையான இன மக்கள். குர் திஸ்தான் பகுதி இன்றைய ஈரான், ஈராக், சிரியா, துருக்கி ஆகிய நாடுகளில் பரவி இருந்தது. ஈராக்கின் சில பகுதிகளில் பெரும்பான்மையாகவும், மற்ற நாடுகளில் சிறுபான்மையினராகவும் இன்று வசித்து வருகிறார்கள். உலகம் முழுவதிலுமாக கிட்டத்தட்ட 5 கோடி குர்திஸ் மக்கள் உள்ளனா;.

   ஈராக் அரசுக்கும் குர்திஸ் இன மக்களுக்கும் பல ஆண்டுகளாக தொடர்ந்து சில மோதல்கள் நடந்து கொண்டிருந்தாலும் 1975–78 இடைப்பட்ட காலத்தில் கிட்டத்தட்ட 2 இலட்சம் மக்கள் படுகொலை செய்யப்பட்டனா;.  1986–88 வரை நடந்த மகப் பெரிய தாக்குதல்களில் 1,82,000 குர்திஸ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனா;. 1991 – ல் 15 இலட்சம் மக்கள் நாட்டை விட்டு அண்டை நாடுகளுக்கு குடி பெயர்ந்தனா;. அதில் கிட்டத்தட்ட 20,000 போ; போகின்ற வழியிலே இறந்தார் . முடிவில் 1992-ல் குர்திஸ் மக்கள் ஈராக்கின் ஒரு பகுதியில் தனிநாடு அமைத்துக் கொண்டனா;. 2007-ல் இருந்து இன்றுவரை அவர்கள் மீது மீண்டும் தொடர் தாக்குதல் நடந்து வருகிறது.

   இன்று பெரும்பான்மை குர்திஸ் மக்கள் முஸ்லிமாக இருந்தாலும் (சன்னி முஸ்லீம்) இன்றும் கிட்டத்தட்ட 5 லட்சம் போ; அவர்களின் பழமையான “யாசிழ்” மதத்தில் இருந்து வருகின்றனா;.  அந்த மதம் கிட்டத்தட்ட இந்து மத நம்பிக்கைகளையும், வழி முறைகளையும் கொண்டது. (சிலா; கிறித்தவர்களாகவும் மதம் மாறியுள்ளனா;). இறைவனோடு ஐக்கியமாவதற்கு பலமுறை பிறவி எடுக்க வேண்டும் என்ற நம்பிக்கை உடையவா;கள் அவர்கள்.

   அவர்கள் பிசாசை வணங்குபவர்கள் என்று மற்ற முஸ்லீம்களும், கிறிஸ்தவர் களும் பழிப்பதும் உண்டு. அவர் களது பிரார்த்தனை சூரியனை பார்த்தே இருக்கும். ஏவாளின் துணையில்லாமல் ஆதாமிலிருந்து பிறந்து இனம் தங்களது இனம் என்பது அவர்களது நம்பிக்கை.

   இப்படி ஒரு மாறுபட்ட இனம் “உலக சமாதானத்தை” விரும்பும் தங்கள் மத்தியில் இருக்க முடியுமா? என சிந்தித்தனா; இஸ்லாமிய தீவிரவாதிகள். அதன் விளைவுதான் இன்று ஈராக்கில் நடந்து கொண்டிருக்கும் இனப்படுகொலை.

   இந்த இன மக்கள் அனைவரும் சன்னி முஸ்லிமாக மாறவேண்டும். அல்லது கொலை செய்யப்படுவா; என மிரட்டல் விடுத்துள்ளனா;. பலா; கொல்லப்பட்டும விட்டனா;. பலர் மலைகளில் ஒளிந்துள்ளனா;. 5-8-2014 –ல் வெளியான தகவல்படி 50000 யாசிழ்கள் மலைகளிலும் காடுகளிலும் உணவின்றி மாட்டியுள்ளனா;. பலா; அடிமையாக மாற்றப்பட்டு விற்கப்பட்டு இருக்கின்றனா;.

   இந்த தீவிரவாதத்தை கண்டு உலகமே மிரண்டு போயுள்ளது. 1SIS (Islamic state of Irag & Syria என்பது அங்கீகரிக்கப்படாத “சன்னி” முஸ்லீம் தீவரவாத அமைப்பு. இது அல் கொய்தாவின் முன் தோன்றல்.

   ஈராக்கில் வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ள 1SIS தீவிரவாதிகள் அவர்களின் வன்முறையால் அனாதையாக்கப்பட்ட யாசிழ் மற்றும் கிறித்தவப் பெண்களை மற்ற நாட்டை சாh;ந்தவர்களுக்கு விற்கிறார்கள். இது அவர்களுக்கு ஒரு முக்கிய வருமானம். அப்படி விற்கப்படும் பெண்களுக்கு ஒரு விலையும் நிர்ணயம் செய்துள்ளனா;.
40 முதல் 50 வயதிற்குள்  -   50,000 தினார்
30 முதல் 40 வயதிற்குள்  -   75,000 தினார்
20 முதல் 30 வயதிற்குள்  -  1,00,000 தினார்
10 முதல் 20 வயதிற்குள்  -  1,50,000 தினார்
1  முதல் 9 வயதிற்குள்  -  2,00,000 தினார் 

No comments:

Post a Comment