வால்மீகி இராமயணத்திலோ, கம்ப இராமயணத்திலோ இல்லாமல் பல சம்பவங்கள் ராமாவதாரத்தைப்பற்றி பல மாநிலங்களில் பலவாறாக உலா வருகின்றன. அவை உண்மையா அல்லது புனையப்பட்டவையா நமக்குத் தெரியாது. ஆனால் அவை நமக்கு சொல்லுகின்ற செய்தி இனிமையானது. அதில் ஒரு சம்பவம் இங்கு தரப்பட்டுள்ளது. இது ஆந்திராவிலும் மற்றும் சில வடமாநிலங்களிலும் சாதாரண மக்கள் மனதிலே பதிந்துபோன சம்பவம்.
அரசன் சகுந்தன், சிறந்த ராமபக்தன். (அது சகுந்தன் அல்ல யயாதி என்போரும் உண்டு. யயாதியின் காலமும், ஸ்ரீராமனின் காலமும் வேறு வேறு. ஆகையால் இங்கு சகுந்தனையே எடுத்துக்கொள்வோம்)
ஒரு யாக பூஜையின் போது சகுந்தன் வசிஷ்டரை முதலிலும் விஸ்வாமித்திரரை இரண்டாவதுமாக கௌரவித்துவிட்டான். நம்முடைய கலக்கார நாரதருக்கு அல்வா சாப்பிட்டது மாதிரி ஆகிவிட்டது.
“விஸ்வாமித்திரரே சகுந்தன் வேண்டுமென்றே உம்மை அவமதித்திருக்கிறான். இதை எப்படி தாங்கள் பொறுப்பீர்கள்”
கோபமுனிக்கு சூடு தலைக்கேறியது. ராமனிடம் விரைந்தார்;. “ராமா, அந்த சகுந்தனின் தலை பொழுது சாய்வதற்குள் என் காலடியில் விழவேண்டும் என ஆணையிட்டார் ;.”
புராணகால “கொரியா; பாய்” நாரதரும் உடனடியாக இந்த செய்தியை சகுந்தனிடம் தெரிவிக்கிறார் ;.
“ராமன் அவ்வாறு நினைத்தால் நான் என்ன செய்ய முடியும் நாரதரே!
ராமனால் மடிவதுகூட புண்ணியமல்லவா! நடப்பது நடக்கட்டும”; என்றார் ; சகுந்தன்.
“நீ சொல்வதில் தவறில்லை சகுந்தா. இருந்தாலும் ஒரு தவறும் செய்யாத உன்னை இராமன் கொன்றால் அது இராமனுக்கும் இழுக்கு அல்லவா. அதற்கு நீ காரணமகலாமா”
சகுந்தனுக்கு குழப்பமாயிற்று.
“இதற்கு என்ன தீர்வு நாரதரே”
“ஓரே ஒரு வழிதான் உள்ளது. நீ அஞ்சனாதேவியிடம் சரணடைந்துவிடு. அவள் உன்னை காப்பாற்றுவாள்.”
சகுந்தன் அஞ்சனாதேவி இருப்பிடம் சென்றடைந்து அவள் பாதங்களை நமஸ்கரித்து தன்னை காத்தருள வேண்டுகிறான்.
அண்டி வந்தவரை காப்பது நமது கலாச்சார கடமையல்லவா! அஞ்சனாதேவி சம்மதித்து விட்டார் ;.
ராமன்தான் சகுந்தனை எதிர்ப்பவன் என தெரிந்ததும் சிறிது கலக்கமடைகிறாள். இருந்தாலும் தனது மகன் ஆஞ்சநேயனை அழைக்க, அடுத்த கணம் ஆஞ்சநேயன் தனது நாவில் ராம நாமத்துடன் அங்கு வந்து சேர்கிறான்.
“மகனே, இந்த மன்னன் சகுந்தனுக்கு நான் அடைக்கலம் கொடுத்துவிட்டேன். அவனை காக்க வேண்டியது உனது கடமை”
அன்னையின் ஆணை இறைவனின் ஆணையல்லவா. யாரை எதிர்க்க வேண்டும் என்பது அறியாமலே அனுமனும் சம்மதித்துவிடுகிறான்.
இராமன்தான் சகுந்தனின் எதிரி என அறிந்ததும், கலங்கினாலும் மனம் தளரவில்லை அனுமன். கொடுத்த வாக்கை காக்க வேண்டியது கடமையல்லவா. தனது வாலால் கோட்டை கட்டி சகுந்தனை உள்ளே பாதுகாப்பாக அமரவைக்கிறான்.
சகுந்தனை தேடி வருகின்ற இராமன் இந்த விசித்திர சூழ்நிலையை கண்டு வியக்கின்றான். ஆனால் குருவின் ஆணையாயிற்றே… தனது நண்பன், சேவகன், சகோதரன் என்றெல்லாம் பாராட்டப்பட்ட அனுமனின் கோட்டையை நோக்கி அம்பு மழை பொழிகிறான்.
அதுவரை நடக்காத அதிசயம் அன்று நடந்தது. ராமனின் அம்புகள் சக்தியிழந்து கோட்டையை சுற்றி வந்து கீழே விழுகின்றன.
நேரம் சாய்கிறது.
சூhpயனுக்கு மறைவதா வேண்டாமா என்று தெரியவில்லை. காலச் சூழற்சி ஸ்தம்பிக்கிறது. அனுமனை வீழ்த்த முடியவில்லை.
இராமன் தனது சக்தி வாய்ந்த இராம பாணத்தை எடுத்தான். அனுமன் தனது நெஞ்சை ராமனுக்கு காட்டி நின்றான். ராம பாணம் அனுமனின் நெஞ்சை துளைத்தது. பிளந்த நெஞ்சில் இராமனின் உருவம். இராம பாணம் இராமனில் ஐக்கியமானது.
இந்த விந்தை இராமனுக்கு விளங்கவில்லை.
நாரதா; வந்தார்; இராமனிடம் ‘இராமா உனது அஸ்திர மழையை சற்று நிறுத்திப் பார் ’ என்றார் ;.
எங்கும் நிசப்தம்.
கூப்பிய கரங்களோடு நின்றிருந்த அனுமனின் அதரங்களிலிருந்து உள்ளத்தை உருக்கி ஆன்மாவைத் தொடும் இராம நாம பிரவாகம் இராமனையே மயங்கச் செய்கிறது.
‘இராமா உன்னுடைய நாமத்திற்கு உன்னைவிட சக்தி அதிகம். இந்தப் போரால் இனி பயனில்லை’.
கலக நாயகன் கலகத்தை முடித்து வைக்க அஸ்திவாரம் இடுகிறார் ;.
சூரியனும் சற்று நிம்மதியாக கீழிறங்க தயாராகிறான்.
‘நாரதரே எனது குருவின் ஆணை நிறைவேற்றாமல் என்னால் இருக்க முடியாதே’
“அதில எந்த குழப்பமுமில்லை இராமபிரானே!!.
தவமுனிவர் விஸ்வாமித்திரரே வாருங்கள்.!!
மன்னன் சகுந்தனே வெளியே வா!!.”
அனுமனின் வால்கோட்டை சற்று நெகிழ சகுந்தன் வெளிப்படுகிறான்.
“மன்னா உன் தலை மகரிஷியின் கால்களில் படும்படி நமஸ்காரம் செய்!”
சகுந்தன் ஓடி வந்து மகரிஷி விஸ்வாமித்திரரின் பாதங்களில் தனது தலையை வைத்து வணங்குகிறான். சகுந்தனின் அந்த நாள் வரை செய்த பாவங்கள் மகாரிஷிக்கு உடனடியாக இடமாற்றம் செய்யப்படுகிறது.
“இராமபிரானே சகுந்தனின் தலை மகாரிஷியின் கால்களில் விழுந்தாயிற்று. தங்களது கடமை முடிந்தது. சகுந்தனுக்கு ஆசியளியுங்கள்” கலக முனி கபட சிரிப்புடன் சொல்கிறான்.
சூரிய பகவான் நிம்மதியாக மேற்கே மறைகிறான்.

No comments:
Post a Comment