Wednesday, 20 April 2016

நெஞ்சு பொறுக்குதிலையே

  கோப்பெருஞ்சோழன் பெருமூச்சு விட்டு சொல்கிறான் “யானோ மன்னன்? யானே கள்வன்” மரணத்தை விரும்பியழைத்து வீழ்கிறான். அவசரத்தில் ‘பிழைத்து’ விட்ட மன்னனின் கட்டளைக்கு மரணதேவனும் கட்டுப்பட்டு மன்னன் பிழைக்காமல் பார்த்துக் கொள்கிறான்.

  விபத்திலே மாண்ட கன்றுக் குட்டியின் தாய் விபரமறியாது விபத்தாக கயிற்றில் படர்நத கொடியை பற்ற (யாருமே அதை உபயோகிக்கவில்லை: ஆதலால், அந்த ஆராய்ச்சி மணியின் கயிற்றில் பற்றி படர்ந்திருந்தது ஒரு பச்சைக் கொடி) விபத்தாக மணியும் அடிக்க, சாக்குச் சொல்லி மகனை காப்பாற்ற அறியாத மன்னனோ மகனை தேர்க்காலில் இட்டு, கொல்கிறான்.

  இது நமது தமிழ் வேதங்கள் பறைசாற்றும் சாஸ்திரங்கள். ‘தமிழ் வாழ்க’ என்று எழுதிவிட்டு தமிழனின் வீரத்தையும் தீரத்தையும் நியாயத்தையும் மறந்து விட்டோம்.

  இன்று நீதி தேவதையின் கண்கள் கட்டப்பட்டிருப்பது நீதி மன்றத்தில் மட்டுமல்ல: மக்கள் மன்றத்திலும் தான். நீதி தன் கடமையை செய்வதைக் கூட பழிவாங்குவதாகவும், அதற்கு கிடைக்கின்ற சிறைவாசத்தை ஏதோ சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தையும் மிஞ்சுவது போல் சித்தரிப்பதைப் பார்த்தால், மக்கள் மனது என்ன பேதலித்துவிட்டதா! எனத் தோன்றுகிறது.  இல்லையென்றால் இந்த கூத்துக்களை அரங்கேற்றுபவர்களை அன்றைய கலிங்கத்து போர்மரபிலே சிரம் கொய்திருக்க வேண்டாமா? முக்காடு போட்டு தொங்க வேண்டிய தலைகள் இன்று வீரத் திலகமிட்டு வலம் வருவது வேடிக்கையல்லவா.

  5-ம், 10-ம் கையூ ட்டுபெற்றவர் கள் முகத்தை மூடி சிறை கம்பிகளுக்கு பின்னால்….. லட்சமும் கோடியும் கொள்ளையடித்தவன் கரை வேட்டியுடன் ஒய்யாரமாய் வீதியுலா வருகிறானே, இதுதான் தமிழனின் பண்பாடா?

   “நஞ்சுண்பார்  கள்ளுண்பவர் ” என்ற வள்ளுவரின் படத்தை அலங்காரமாக வைத்துவிட்டு தெருவுக்கு தெரு நஞ்சு கடைகளை திறப்பதுதான் தமிழுக்கு செய்கின்ற வரலாற்றுத் தொண்டா?

   “ஏற்பது இகழ்ச்சி” என்று முழங்கிவிட்டு சென்றாளே, ஔவை பிராட்டி அவள் தமிழச்சியா அல்லது சமுதாயம் முழுமையுமே பிச்சைக்காரா;களாக மாற்றி விட்ட நவ உலகதாரகை, வாழும் தேசபிதா, வருங்கால பிரதமா;, அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி என இவார் கள் வருணிக்கும் புது உலக நாயகிகள் தமிழச்சியா?

  பாரதி அன்றே சொன்னான்….    அவன் தீர்க்கத்தரிசி…….

          “நெஞ்சு பொறுக்குதில்லையே, இந்த
         நிலை கெட்ட மனிதரை நினைத்துவிட்டால்”

  நல்லவர் மனதிலே அக்னி குஞ்சை ஏற்றுங்கள்…. வெந்து தணியட்டு;;ம் தீயவர் காடு!!!!

No comments:

Post a Comment