Monday, 2 May 2016

வாழ்க்கைத் துணை

சிறை முளைக்கும் முன்னால் நான்
                             சிறை பிடித்தேன்..
சிறைக்குள்ளே நறுமலராய்
                             பரிணமிததாய்!
இறை கொடை இதுவென நான்
                             கண்டுகொண்டேன்..
பறை கொட்டி என் புகழ் மணக்க
                              இணை நடந்தாய்!

சாய்ந்து விழும் காலமதில்
                              தூணாய் நின்றாய்..
நிலைகுலைந்த பொழுதில் மனம்
                             நிலைக்கச் செய்தாய்.
வீழ்ந்திருப்பேன் விழிபிதிங்கி
                             வாழ்வின் முன்னே...
அமிர்தம் கை வந்ததாலே
                              உடம்பில் நின்றேன்.

உன்னால் நான் என்னால் நீ
                             என்றிருந்தோம்...
பிணங்கி நின்ற பொழுதெல்லாம்
                             வருந்தி நின்றோம்.
வெயிலோன் தன தணல் மறைக்கும்
                             நறு நிழலே,
உள்ளத்தின் கிடப்பெல்லாம்
                             சொல்வதில்லை

வெள்ளத்தில் அழிந்துவிடும் சொந்தமல்ல
          இது
எழுபிறப்பும் தொடர்ந்து வரும் பந்தம்