Thursday, 3 July 2025

காட்டேரிகள் அதிகாரமென்றால்

போலீஸ்...
கையை உடைத்தது:
காலை உடைத்தது:
கஞ்சா வழக்கில்
சிக்க வைத்தது :
உயிரைப் பறித்தது:
இவையெல்லாம்
இனி செய்தியல்ல!
நமக்கு
சிறிது நாளில்
பழகி விடும்.
***
இது
நமக்கில்லை என்று
ஒதுங்கி விடுவோம்
நம் கால்
உடைபடும் வரை .
****
நாம்
மிருகங்கள் மத்தியில்
"வாழும்"
கோழை
மனிதர்கள்.
*****
பாண்டியன் நெடுஞ்செழியன்
மனுநீதி சோழன்
சிபி சக்ரவர்த்தி
பாரி மன்னன்
யாரும்
இங்குப் பிறக்கவில்லை
விஜயரகுநாத சேதுபதியும்,
அக்காள் மடம்
தங்கச்சி மடமும்
சரித்திரமாய் புனைந்த
கற்பனைக் கதைகள்...
******
நமது சரித்திரமும்
வீரமும்
நேர்மையும்
நமக்கு
தெரிவதில்லை.
இன்று
"அச்சிட்ட தாள்"
இருந்தால்
கொலைகளும்
நியாயமே.
அதிகாரம்
கையிலென்றால்
இரவிலும்
சூரியன் வரும்.
*****
அமாவாசையன்று
நிலவைக் காட்டிய
அபிராமி
இன்று
சூலத்துடன்
வரமாட்டாள்.
நாம்தான்
பணத்தை
சாப்பிட
பழகிவிட்டோமே!
யார்தான்
அவளை
நம்பி
அழைப்பர்.
******
உதிரம் குடிக்கும்
காட்டேரிகள்
அதிகாரமென்றால்
அங்கு
நல்லவன்தான் குற்றவாளி.

No comments:

Post a Comment