ஞானத்தை விட்டுச்செல்
அஞ்ஞானத்தையும் விட்டுச்செல்
இதழாய் விழுந்தது போல்
சருகும் பூஜ்யமாய் வீழட்டும்
புதிதாக துவங்கிவை
வரும் எச்சங்கள்
கடிதுழைத்து
அவற்றை அழகு படுத்தட்டும்
....
நல் எண்ணங்கள்
தொடர்ந்து பயணிக்கட்டும்
நம் பயணம்
முடிந்த பிறகும் கூட.
...
தலைமுறைகள் விழித்திருக்க
எஞ்சியதை விட்டுச்செல்
சந்ததிகள் சோம்பி
உண்டுறங்க விடவேண்டாம்
...
விதைகள் என்றும் அழிவதில்லை
விதைகளை விட்டுச்செல்
பூப்பதும் காய்ப்பதும்
வருங்கால உலகிற்காய்
....
உன் காலடியின் ஓசைகள்
சங்கீதமாய்
மங்கி மங்கி போனாலும்
மாய்ந்து போவதில்லை
....
பிரபஞ்சத்தின்
எங்கோ ஒரு மூலையில்
உன் ஆலாபனைகள்
கவிபாடி தாலாட்டும்
- தனஞ்சயன்
No comments:
Post a Comment