ஒரு கலியுக விந்தை
இறைவனின் யுக படைப்பில்
அறிவிருந்தால் பொருளில்லை
பொருளிருந்தால் குணமில்லை
குணமிருந்தால் வாழ்வில்லை
துன்பமெல்லாம் "கர்மா" என்றால்
நல்லவர்க்கு துன்பம் ஏன்??
காணாத பிறவியில்
செய்ததும் பலிக்குமோ?
வீணான இப்பிறவி...
இப்பிறவி பாவமெல்லாம்
வரும் பிறவி சாபமென்றால்...
தெரியாத ஊருக்கு
புரியாத வழியன்றோ?.
முற்பிறப்பும் அறிந்ததில்லை
மறுபிறப்பும் புரிவதில்லை
இப்பிறப்பில் செய்தவினை
இப்பிறப்பில் கூடுமென
செப்பிடாத இறைவனவன்
இருந்தென்ன மாய்ந்தென்ன?
நீ
உண்டென்றால் விதி மாற்று
இல்லை
இல்லையென கூறிச்செல்..
நீ ஆதியோ அந்தமோ
நீதியை காட்டிச்செல்
புரியாத கணக்குகளை
தெரியாமல் அழித்துவிடு
- தனஞ்சயன்
No comments:
Post a Comment