ஆடி அடங்க ......ஆடி அடங்க ......
கடுகை துளைத்து
பெரும் தருவை புதைத்து
படர் தருவில் இருந்து
கடுகே விதையாய்
விதையில் இல்லை
மரமும் இலையும்
விதையில் உண்டு
சூட்சும ஜனனம்
அண்டமே பூச்சியாய்
பூச்சியே அண்டமாய்
விரிந்து பரந்து
ஒடுங்கி அடங்கி
எதிரும் புதிருமாய்
தெளியா தெளிவதாய்
புரியா புரியதாய்
தெரியா தெரிவதாய்
விளங்கா விளக்கமாய்
இருளினுள் ஒளியதாய்
பிறப்பினுள் இறப்பாய்
இறந்தபின் பிறப்பாய்
முடிவிலா சுழற்சியில்
மேலுமாய் கீழுமாய்
ஓய்விலேன்
இனி
ஓடி உன்னினுள்
அடங்குதல் எக்காலம்!
------------தனஞ்சயன்
No comments:
Post a Comment