"முடவர்களை நடக்க வைக்கும் ப்ரிந்தாவனம்
மூடர்களை அறிய வைக்கும் ப்ரிந்தாவனம்"
................................
கூசாமல், குறுகாமல்,
சரித்திரம் தெரிந்தும் தெரியாமல்,
அழிக்க வந்த கயவர்களை,
மதவெறியில் தாங்கி நிற்கும்
அரக்கர்களை வேரறுக்க .....
தர்மத்தை அறியாமல், புரியாமல்
அழிவில்லா சனாதன
வேர்களை அறுத்தெறிய
கூலிக்கு வாளேந்தும்
வீணர்களை அழித்தொழிக்க ......
ஊரெல்லாம் கொள்ளையிட்டு
புவியெல்லாம் தனதுமாக்கி,
மனிதர்களை அடிமையாக்கி
நல்லவன் போல் ஊளையிடும்
கயவர்களை களையெடுக்க .....
அதர்ம சத்திரியர் தலைதூக்கி
சான்றோர்கள் வருந்துகையில்
தருமத்தின் வாழ்வுதனை
கவ்விய சூதழிக்க
தர்ம சத்ரியனாய் ....
மீண்டும் பிறக்க வேண்டும் ஒரு கண்ணன்
நம் உள்ளிருந்து,
மீண்டும் பிறக்க வேண்டும் ஒரு கண்ணன்:
No comments:
Post a Comment