Tuesday, 17 January 2023

விதி உனக்கு, வேறு வழியில்லை!

 கண்ணா ....


அறிவேன் நான் அறிவேன்.. 

எனை அறிவேன் நினை அறிவேன். 


முடைமுடையாய் பாவங்கள் 

உள்ளும் புறமுமாய், 

நிறைநிறையாய்  கொண்டுள்ள  

கீழினும் கீழானேன்!


உன் குழலோசை மட்டும் என் 

செவிகளில் பாய்ந்துவர, 

ஏனிந்த கங்கை, என் 

ஊனக்கண் கரைகளிலே!

 

அறிகிலேன் நான் அறிகிலேன்,

உன் ஒடக்குழல் மாயம் நான் அறிகிலேன்! 


மாயவனே கேட்கிறேன் நான்... 

அருள்வது உன் கடனே... 

பெறுவது நான், உன் அடிமை.  

விதி உனக்கு, வழியில்லை!     


உன் படியாய் கிடந்துழலும் 

பேறெனக்கு தகுதில்லை... 

மலராகி நின் மேனி அலங்கரிக்க,

தூயவனும் நானில்லை! 


புரிந்தது, எனில் புரிந்தது... 

உன் தத்துவம் இனி புரிந்தது. 


உன் தோகையின் ஸ்பரிசங்கள் 

என் மேனி வருடிவரும்.... 

உன் நாதங்கள் செவியிலே

முடிவிலா இசை ஒலிக்கும்.


யானைக்கும் மோட்சமுண்டு...

ததி பாணடன் பானைக்கும்   

கதி மோட்சம் உண்டென்றால்... 

அசுரரிபு! சம்காரம் முக்தியன்றோ? 


கண்ணா.... 


என் மெய் தீண்டி உன் பதங்கள்    

என் சிரஸில் நீ ஏற்றிடுவாய்! 

பாதாள லோகமென 

பாய்ந்தாலும், என் காவலன் நீ! 


விதி உனக்கு, வேறு வழியில்லை!  

No comments:

Post a Comment