....யான் யார்? நானா ??.....
யான் யார்? நானா ??
நேற்றிருந்த நான் இன்றெங்கே??
இன்றைய யான் நாளை யுண்டா??
நாளை, நான் கொண்ட ஊனில், யான் இல்லையெனில்
நான் என்ற யான், எங்கே மறைவேன்
ஊனை நான் என்று நித்தம் மயங்கி பின்
ஊன் நானில்லை என வீழ்ந்து கிடப்பதென்ன!
யான் ஆக நின்ற நான் பிணமாக மாய்ந்தபின்
நான் எங்கு செல்வேன், இன்று நான் எங்கு உள்ளேன் ?
நான் யான் ஆகும் முன்னே, யாராகினேன்?
நான் நீறு ஆன பின்னே யாராகுவேன்?
நான் அன்று வெற்றிடமா...
இல்லை அண்ட புதைகுழியா
நான் மீண்டும் வருவேனா?, இல்லை
மீளா பெருங்குழியாய் மறைவேனா?
எந்தையும் தாயும் சென்றவிடம் செல்வேனோ !
இல்லை கானகத்து காரிருள் தானாகி தவிப்பேனோ ?
செய்த பயன் செலவழிக்க மீண்டும் நான் பிறப்பேனோ?
புல்லாயா, புளுவாயா, மிருகமாயா ??
பிறந்ததுவே இறப்பதற்கு ... பின் பிறப்பெதற்கு??
அடைந்ததுவே விடுவதற்கு... பின் வாழ்வெதற்கு ??
நடந்ததெலாம் விழுவதற்கு.. பின் நடையெதற்கு ??
சுற்றமெலாம் மறைவதற்கு... பின் நினைவெதற்கு??
புரியாத தத்துவத்தில் யானாக வாழுகின்றேன்
யான் யார் என்று அறியுங்கால்,
நான் அன்று மாய்ந்திடுவேன்
நான் மாய்ந்து யான் அறிவேனோ ? இல்லை
நானும் யானும் செர்ந்தழிவேனோ??
மாயமதை யாரறிவார்!!
- dhananjayan
No comments:
Post a Comment