முகுந்த மாலா ஸ்தோத்திரம் - குலசேகர ஆழ்வார் ---- அதிலிருந்து சில
mukunda mūrdhnā
praṇipatya yāce
bhavantam
ekāntam iyantam artham
avismṛtis
tvac-caraṇāravinde
bhave bhave
me ’stu bhavat-prasādāt
முகுந்தா உனக்கொரு வேண்டல்
என்றென்று எங்கெங்கு எவ்வகை பிறக்கினும்
நின் முகிழ் தாமரை பாதங்கள்
நினைத்திட அருளினை நல்குவை நல்குவை
nāhaṁ vande
tava caraṇayor dvandvam advandva-hetoḥ
kumbhīpākaṁ
gurum api hare nārakaṁ nāpanetum
ramyā-rāmā-mṛdu-tanu-latā
nandane nāpi rantuṁ
bhāve bhāve
hṛdaya-bhavane bhāvayeyaṁ bhavantam
நரகத்தில் உழலலோ போகத்தில் மருளலோ
எதனினும் எனக்கொன்றும் இல்லை
சொர்க்கமும் வேண்டேன் முகுந்தா முகுந்தா
உன் மலரடி மட்டுமே நெஞ்சத்துள் தாராய்..
nāsthā
dharme na vasu-nicaye naiva kāmopabhoge
yad bhāvyaṁ
tad bhavatu bhagavan pūrva-karmānurūpam
etat
prārthyaṁ mama bahu mataṁ janma-janmāntare ’pi
tvat-pādāmbhoruha-yuga-gatā
niścalā bhaktir astu
செல்வமும் வேண்டேன் இச்சையும் வேண்டேன்
கர்ம வினைப்பயன் காண்பேன்
நின் பாதகமலத்தின் சேவை ஒன்றையே
நெஞ்சத்தில் நின்றிட செய்வாய்
divi vā
bhuvi vā mamāstu vāso
narake vā
narakāntaka prakāmam
avadhīrita-śāradāravindau
caraṇau te
maraṇe ’pi cintayāmi
நரகனை வதைத்த நல் தேவா (எனக்கு)
சொர்கமோ நரகமோ உன்மனம் கண்ணா
என் ஊன் விட்டு உயிர் பொகும்பொது
உன்னிரு பாதங்கள் மனதிலே வேண்டும்
krishna
tvadiya-pada-pankaja-panjarantam
adyaiva me
vishatu manasa-raja-hamsah
prana-prayana-samaye
kapha-vata-pittaih
kanthavarodhana-vidhau
smaranam kutas te
காலதேவன் வந்தெனைக்
கூப்பிடும்போது
நெஞ்சு அடைக்க நாவும் மயங்க
சிந்தை கலங்கிடும் போது
உன் பாதங்கள் எண்ணுவனோ அறியேனே
(இன்று )
சிந்தை தெளிந்து நெஞ்சம் மகிழ்ந்து (உன்)
பாதங்கள் தொழுகின்ற போதே (உன்)
மலர்பாதங்களிடை தஞ்சம் புகுந்திடும்
அன்னமாய் மாறிட வேண்டும்....
(உன் பாத)
மொட்டு விரி பட்டு பதுமத்தின் ஊடே
என் உள்ளுறை ஜீவன் கிடந்து
உன்முகம் நோக்கி உன்னில் நான் மாய
நல்லருள் தந்திடல் வேண்டும்...
----- தமிழில் தனஞ்சயன்
No comments:
Post a Comment